சசிகலா- சுதாகரன் தண்டனை போதாது ; பெங்களூரு கோர்ட்டில் புதிய மனு

தினமலர் செய்தி : பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் , குற்றவாளிகளான, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது, இதற்குமேலும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒரு புதிய மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கு இன்று கர்நாடக சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டார். இவர் இன்று விடுப்பு எடுத்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு நீதிபதியான பில்லப்பா கோர்ட் அறைக்கு வந்ததும், இந்த வழக்கு நீதிபதி குமாராசாமி தான் விசாரிக்கும் பொறுப்பை பெற்றவர். நான் இதனை விசாரிக்க முடியாது. எனவே கோர்ட் முறைப்பபடி இந்த வழக்கை வரும் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்றார்.
தண்டனை போதாது ! இன்று கோர்ட் கூடியதும், மெட்ராஸ் பிரஸ் கிளப் தலைவர் அன்பழகன் ஒரு மனுவை நீதிபதியிடம் கொடுக்க முற்பட்டார். இந்த மனுவில், இந்த வழக்கின் குற்றவாளிகளான சசிகலா ( ஏ-2), சுதாகரன் ( ஏ.3), இளவரசி( ஏ.-4), ஆகியோருக்கு வழங்கிய தண்டனை போதாது என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிபதி குமாரசாமி விசாரிக்கும் போது கொடுங்கள் நான் பெற முடியாது என்று நீதிபதி பில்லப்பா கூறி விட்டார்.
பவானி சிங் ஆஜருக்கு எதிர்ப்பு : இந்திய மக்கள் மன்ற நிறுவன தலைவர் வராகி என்பவர் ஒரு மனு கொண்டு வந்தார். இதில் இந்த வழக்கில், அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராக கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனுவும் நீதிபதி பெறவில்லை. திங்கட்கிழமை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

Comments