பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் சிறிசேன

தினமலர் செய்தி : கொழும்பு : இலங்கை அதிபர் சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன அந்நாட்டு அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்நிலையில், சிறிசேனவின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சேனரத்ன கூறுகையில்,பிரதமர் மோடி மோடி, இலங்கை அதிபர் சிறிசேனவை இந்தியாவுக்கு முதலில் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டு, முதல் வெளிநாட்டு பயணமாக அதிபர் சிறிசேன, அடுத்த மாதம் இந்தியா செல்ல உள்ளார் என கூறியுள்ளார்.

Comments