வங்கிகளின் வராக்கடன் 85 ஆயிரம் கோடி ரூபாய்

தினமலர் செய்தி : புதுடில்லி: வங்கிகளின் வராக்கடனில், வழக்குகளில் சிக்கியுள்ள தொகை, 85 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்தக் கடனை வசூலிக்க, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

21.4 சதவீதம்:
இது குறித்து, இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பு, 2014 - 15ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டு (ஜூலை - செப்.,) நிலவரப்படி, வங்கிகளின் வராக்கடன் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள தொகை, 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 21.4 சதவீதம் கூடுதலாகும்.

வழக்கு:
நாட்டிலேயே, மகாராஷ்டிராவில் தான், மிக அதிகமாக (34,585 கோடி ரூபாய்), கடன் மீட்பு வழக்குகள், நிலுவையில் உள்ளன. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவர், மூன்று மாதங்களாக தொடர்ந்து வங்கியில் கடனை திரும்ப செலுத்த தவறினால், அக்கடன், வராக்கடன் பிரிவில் சேர்க்கப்படும். அதன் பின்னும், வங்கி நிர்ணயித்தபடி, கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால், கடனாளி மீது வங்கிகள் வழக்கு தொடுத்து, அக்கடனை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கும். இவ்வகை வழக்குகள் முடிய, குறைந்தபட்சம், 5 - 7 ஆண்டுகளாகும்.

எஸ்.பி.ஐ., முதலிடம்!
* கடந்த, 2013 டிச., இறுதி நிலவரப்படி, 40 வங்கிகளின் வசூலாகாத கடன் 2.40 லட்சம் கோடிரூபாயாக உள்ளது.* இதே காலத்தில், அதிகம் வசூலாகாத கடன் கொண்ட வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 67,800 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

Comments