தினமலர் செய்தி : வருவாயை மேம்படுத்த அக்கறை காட்டாததால், நிர்ணயித்த வருவாய் இலக்கை எட்ட
முடியாமல், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நடப்பு
நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் நிலை
உள்ளதால், மாநிலத்தின் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.ஆனால்,
இந்த நிதி இலக்கை எட்ட முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. சமீபத்தில்,
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதை
ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக அரசின், 2014 - 15 பட்ஜெட் படி,
*பல்வேறு வகைகளில் வருவாய், 1,27,389 கோடி ரூபாய்.
*வரி வகையிலான வருவாய் மட்டும், 91,835 கோடி ரூபாய்.
கடினம்:'தமிழக அரசு ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட சில நிதி ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக, எந்தவொரு நிதிச் சுமையையும், ஏற்றுக் கொள்வது, மிகக் கடினமானது. எனினும், 'நாப்தா'வுக்கான, 'வாட்' வரியை ஏற்றுக் கொள்ள, அரசு தயாராக உள்ளது.
உரத் தொழிற்சாலைகளுக்கு, மத்திய
அரசு எரிவாயு இணைப்பு வழங்கும் வரை, தொடர்ந்து மானியம் வேண்டும்' என,
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.'முதல்வரின் இந்த
கடிதம், மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதை,
அம்பலப்படுத்துவதாகவே உள்ளது. எனவே, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட
வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.பொதுவாக,
அரசுக்கு, 75 சதவீத வருவாய், வணிக வரி மூலம் கிடைக்கிறது. நடப்பு ஆண்டில்,
11.04 சதவீத வளர்ச்சி இருக்கும்; வருவாய் இலக்கு, 68,724 கோடி ரூபாய் என,
பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 'டாஸ்மாக்' விற்பனை வருவாய், 14
ஆயிரம் கோடி ரூபாயும் சேர்த்து, இதுவரை, 38,530 கோடி ரூபாய் மட்டுமே
வருவாய் வந்துள்ளது. இலக்கில், 56 சதவீதம் மட்டுமே
எட்டப்பட்டுள்ளது.இன்னமும் மீதமுள்ள, மூன்று மாதங்களில், என்ன தான்
போராடினாலும், 50 ஆயிரம் - 52 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான் இலக்கை எட்ட
முடியும் என்ற சூழல் உள்ளது.பதிவுத் துறையில், 10,470 கோடி ரூபாய் வருவாய்
இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கட்டுமானங்கள் குறைவு, பத்திரப்
பதிவுகள் குறைந்துள்ளதால், 65 சதவீத இலக்கு கூட எட்டப்படவில்லை; 6,700
கோடி ரூபாய் அளவில் தான் வருவாய் கிடைத்துள்ளது.தமிழக அரசுக்கு இந்த,
இரண்டும் தான், முக்கிய வரி வருவாய் வரவுகள்.தமிழக அரசின், 2014 - 15 பட்ஜெட் படி,
*பல்வேறு வகைகளில் வருவாய், 1,27,389 கோடி ரூபாய்.
*வரி வகையிலான வருவாய் மட்டும், 91,835 கோடி ரூபாய்.
கடினம்:'தமிழக அரசு ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட சில நிதி ஆதாரங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக, எந்தவொரு நிதிச் சுமையையும், ஏற்றுக் கொள்வது, மிகக் கடினமானது. எனினும், 'நாப்தா'வுக்கான, 'வாட்' வரியை ஏற்றுக் கொள்ள, அரசு தயாராக உள்ளது.
மதுபானம்:இதுதவிர, மதுபானங்கள் மூலம் கிடைக்கும் ஆயத் தீர்வை வரி, 6,438 கோடி ரூபாய்; மோட்டார் வாகன வரி வகையில், 5,147 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த வரிகள், வணிகவரித்துறையை ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், வரி வருவாய் கடந்த ஆண்டைவிட வெகுவாகக் குறைந்து விட்டது என, அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். இதே நிலை நீடித்தால், வருவாய் இலக்கான, 91,835 கோடி ரூபாயில், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவை எட்ட முடியுமா என்பது கேள்விக்குறி. சராசரியாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என, வரி சார்ந்த ஆலோசகர்கள் கணக்கிடுகின்றனர்.தற்போது, அரசுக்கு, 1.78 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி தொடர்ந்தால், கடன் சுமை மேலும் கூடும். அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தி, வாய்ப்புள்ள வகைகளில் எல்லாம், வரி வருவாயை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.
வருவாய் குறைய என்ன காரணம்?
பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. வரி சார்ந்த,10 ஆயிரம் வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதை முடிவுக்கு கொண்டு வந்தால்,12 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும். இதில், அரசு கவனம் செலுத்தவில்லை.இனி வரும்காலம், வரி வசூல் கொட்டும் காலம் என, கூற முடியாது. பண்டிகைகள் பெரிதாக இல்லை. எனவே, எதிர்பார்த்த இலக்குபடி வரி வருவாய் கிடைப்பது சாத்தியம் இல்லை என்கின்றனர், வரி ஆலோசகர்கள்.அரசுத் துறை உயர் நிலை அதிகாரிகள், தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக, அரசிடம் உண்மையான விவரங்களை தெரிவிக்காமல், 'வருவாய் இலக்கை நோக்கிச் செல்கிறோம்; வளர்ச்சி வேகம் சரியாகச் செல்கிறது' என, ஆவணங்களின்படி கணக்கு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
'டாஸ்மாக்' வருவாய் குறைவா? நடப்பு ஆண்டிற்கு, 'டாஸ்மாக்' மூலம், 6,040 கோடி ரூபாய் ஆயத்தீர்வை;20 ஆயிரம் கோடி விற்பனை வரி என, 26,040 கோடி ரூபாய் வருவாய் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, ஆயத்தீர்வை - 4,300 கோடி ரூபாய்; விற்பனை வரி - 14 ஆயிரம் கோடி ரூபாய் என, 18,300 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 10.47 சதவீதம் உயர்வு எதிர்பார்த்ததில், 7.3.சதவீதம் குறைவாகவே உள்ளது.விலையேற்றத்தால் வருவாய் கடந்த ஆண்டை விட சற்று கூடினாலும், சரக்கு விற்பனை, 8.5 சதவீதம் குறைந்துள்ளது.
காசோலை கணக்கு இது! வணிக வரித்துறையில், 38,530 கோடி ரூபாய், வரி வசூல் வந்துள்ளதாக ஆவணங்கள் இருந்தாலும், பெறப்பட்ட காசோலைகள் அடிப்படையிலான கணக்கு இது. காசோலை பணம் இல்லாமல் திரும்பியதும் நிறைய உண்டு. கருவூலத்திற்கு இந்த தொகை முழுமையாக சென்றிருக்க வாய்ப்பில்லை; வளர்ச்சி காட்டுவதற்காக அதிகாரிகள் உண்மையை மறைக்கின்றனர்.
- ஓய்வு பெற்ற வணிக வரி அதிகாரி
செலவை குறைக்க வேண்டும்: வரி வருவாயை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும், அரசு அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. செலவுகளை குறைக்க முயற்சிக்கலாம். இது தொடர்பாக, அரசு வருவாய், செலவு சார்ந்த சங்கங்களை அழைத்து பேச வேண்டும். வருவாயை மேம்படுத்தும் திறன் நம் ஊழியர்களுக்கு உண்டு. அதை விட்டு, ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியான நடைமுறை அல்ல; மத்திய அரசு தரும் மானியத்திலும் நாம் செலவைக் குறைத்து,பணத்தை சேமிக்க முடியும்.
- தமிழ்செல்வி மாநில தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
இலவசங்களை ரத்து செய்ய வேண்டும்:
தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். செலவில் பெரும்பகுதி மாநில வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும். அவசியம் இல்லாத இலவசத் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். வருவாய் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை முறையாக பெற அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- ஜெ.ஜேம்ஸ்,
தலைவர்,
'டாக்ட்' (தமிழ்நாடு கைத்தொழில் குறுந்தொழில் முனைவோர் சங்கம்)
கோவை.
பொங்கல் இலவச பொருட்கள் 'கட்?' பொங்கல் பண்டிகைக்கு, அரசு சார்பில், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ரொக்கம், 200 ரூபாய், ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும். நிதி நெருக்கடியால் இந்த ஆண்டு, அதை ரத்து செய்வது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம் கேட்டபோது, ''இதுகுறித்து அரசு முடிவெடுக்கும்,'' என்றார். இலவச பொருட்கள் உண்டா, இல்லையா என்பதை, கூற மறுத்து விட்டார்.
Comments