2)இதற்கு ஒபாமாவின் பாதுகாப்புப்படையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறைந்த பட்சம் 45 நிமிடம் தான் அவர் இருப்பார் எனவும் உயரதிகாரி கூறியுள்ளார்.
3)அணிவகுப்பு பேரணி நடந்து முடியும் வரை ராஜ்பாத் பகுதியில் எந்த விமானம், ஹெலிகாப்டரும் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
4)ஒபாமாவின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு எங்களுடையது என உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு கூறியுள்ளார்.
5)டில்லி நகர் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் , சூழல் கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொருவரின் நடமாட்டமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என டில்லிமூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
6)டில்லியில் மெட்ரோ ரயில்நிலையத்தின் பாதுகாப்பினை அமெரிக்கா பாதுகாப்புபடையினர் எடுத்துக்கொண்டு 72 மணிநேரம் அவர்கள் கண்காணிக்க உள்ளனர்.
7 பாதுகாப்பு வாகனங்கள் என்ற வகையில் மட்டும் 30 கார்களில் ஒன்று உலகின் அதி நவீனமான, பாதுகாப்பான காராகும். இதில்தான் ஒபாமா பயணிப்பார்.
8)ஒபாமா பயணிக்கும் விஷேச புல்லட் துளைக்காத இந்த காரில் அமெரிக்காவில் துணை அதிபர் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் இடையே நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் போன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
9)ஒபாமா , தாஜ்மகாலை , தனது குடும்பத்தினருடன் பார்வையிட உள்ளார். இதற்காக 27-ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
10) ஒபாமா வருகையையொட்டி இந்தியா -பாக்.எல்லையில் கூடுதலாக எல்லை பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments