தினமலர் செய்தி : சென்னை: இலங்கை அரசுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வரும் மோடி அரசுக்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தே. ஜ., கூட்டணியில்
இருந்து ம.தி.மு.க,. விலகுவதாக கட்சியின் பொது செயலர் வைகோ சென்னையில்
இன்று மதியம் தெரிவித்தார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி
செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீப காலமாக வைகோ பா.ஜ., அரசை கடுமையா விமர்சித்து வந்தார். இலங்கை தமிழர்கள் தூக்கு, இலங்கை மீனவர்கள் கைது ஆகிய விவகாரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் மோடியை வைகோ விமர்சிப்பது, கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு செயல்படுவது சரியல்ல. நாவடக்கம் தேவை என எச்சரிக்கப்பட்டது. பா.ஜ., முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூட ம.தி.மு.க.,வை தடை செய்ய முயற்சிப்பேன் என்றும் கடும் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இவ்வாறு பல பிணக்குகள் இருந்து வந்தன. இந்நிலையில் ம.தி.மு.க., மாவட்ட செயலர், உயர்நிலை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி, பாம்பாறு அணை விவகாரத்தில், மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக நடக்கவில்லை. கச்சத்தீவு மீட்பில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை வாஜ்பாய், அத்வானி போன்றோர் வழிநடத்தி சென்ற காலத்தில் கடைபிடிக்கப்பட்ட போக்கு மோடி தலைமையிலான கூட்டணியில் இப்போது இல்லை. எனவே இந்த உறவை தொடர முடியாது என்பதால் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிட முடிவு செய்துள்ளோம் என வைகோ கூட்ட முடிவிற்கு பின்னர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
விவகாரத்து தான் வழி: எச்.ராசா : கூட்டணி விலகல் தொடர்பாக பா.ஜ., செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறுகையில், நாட்டை துண்டாடும் முயற்சிக்கு நாங்கள் துணை போக மாட்டோம். பா.ஜ., சித்தாந்தம், ம.தி.மு.க., சித்தாந்தம் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. ஒற்றுமை சரியாக இருக்கும் என நினைத்து தான் நாங்கள் ம.தி.மு.க,வை சேர்த்தோம். கல்யாணம் முடிக்கும் போது எல்லாம் சரியாக இருக்கும் என நம்பித்தான் முடிக்கிறோம். ஒத்துவரவில்லையெனில் விவாகரத்து தான் முடிவு. நல்ல முடிவு எடுத்துள்ளது. தினமும் சண்டை போட்டு கொண்டிருப்பதை விட பிரிந்து செல்வது நல்லலது. பிரிந்து செல்வதால் பாதிப்பு ஒன்றும் இல்லை. என தெரிவித்தார்.
நிலையாக இருக்க மாட்டார் : வைகோவை பொறுத்தவரை எந்தவொரு கூட்டணியிலும் நிலையாக இருக்க மாட்டார் என்றே கடந்த கால வரலாறு தெரிவிக்கிறது. தி.மு.க., வில் இருந்து பிரிந்து மீண்டும் தி.மு.க.,வில் கூட்டணி, அ.தி.மு.க.,வில் கூட்டணி, காங்., பா.ஜ.,வில் கூட்டணி மீண்டும் முறிவு என இவர் பல முறிவுகளை பார்த்தவர் ஆவார். எடுத்த முடிவுகளால் வைகோ எப்போதும் அரசியல் ரீதியாக எவ்வித லாபத்தையும் பார்க்கவில்லை. மாறாக நஷ்டமே அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு இல்லை: தமிழிசை கருத்து ; ம.தி.மு.க., விலகல் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்; கூட்டணியில் இருந்த போது தொகுதிகளை விட்டு கொடுத்தோம். சகோதர உணர்வுடன் தான் இருந்தோம். ஆனால் உலகம் முழுவதும் மோடியை பாராட்டும் போது மோடியை வேண்டுமென்றே வைகோ விமர்சனம் செய்தார். இதனால் எங்களுக்கு பிளவு ஏற்பட்டது. இவரது விலகல் எங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அண்டைய மாநிலங்கள் 2016ல் உருவாகும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும் இவ்வாறு தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார்.
வைகோ கடந்து வந்த பாதை
தி.மு.க.,வில் முன்னணி தலைவராக இருந்த வைகோ, அக்கட்சியில் இருந்து விலகி 1994 மே 6ல் ம.தி.மு.க., என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
* இக்கட்சி 1996ல் முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்தது. இதில் யாருடனும் கூட்டணி சேராமல் 177 இடங்களில் போட்டியிட்டது. இதில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 5.78 ஓட்டு சதவீதத்தை பெற்றது.
* 1996 லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 1 இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
* 1998 லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் (அ.தி.மு.க., வுடன்) போட்டியிட்டது. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
* 1999 லோக்சபா தேர்தலிலும் தே.ஜ., கூட்டணியில் (தி.மு.க., வுடன்) போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது.
* 2001 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்து 211 இடங்களில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி இல்லை. இத்தேர்தலில் கட்சியின் ஓட்டு சதவீதம் 4.65.
* 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணியில் (தி.மு.க., வுடன்) போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது.
* 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து 35 இடங்களில் (ஓட்டு சதவீதம் 5.98) போட்டியிட்டது. இதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டசபைக்கு 6 எம்.எல்.ஏ.,க்களை அனுப்பியது.
* 2009 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 1 இடத்தில் மட்டும் வென்றது.
* 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் சேர்ந்தது. 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
* 2014 டிச., 8 : தே.ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகியது.

Comments