அரசியல் வாதிகள்- ராணுவ அதிகாரிகள் குழந்தைகளை கொல்வோம்: தலிபான்


தினமலர் செய்தி : கராச்சி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி வரும் பாகிஸ்தானிற்கு தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் மற்றும் வீடியோ மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மிரட்டலில் உயர் அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை குறி வைத்து கொல்வோம் என்றும் கொடூர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெக்ரீக் இ தலிபான் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பெஷாவர் ராணுவ பள்ளியில் நுழைந்து 130 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சுட்டு கொன்றனர் . இந்த சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியை பாகிஸ்தான் தற்போது துவக்கியிருக்கிறது. இதனை பொறுக்க முடியாத பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் எச்சரித்துள்ளனர். தலிபான் அமைப்பு இணைய தளத்தில் ஆங்கிலத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போல் இந்த அமைப்பின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவரான முகம்மது ஹர்சானி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். இந்த கடிதத்தில், எங்களின் எதிர் நடவடிக்கை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், உயர் அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை குறி வைத்து கொல்வோம் . இதில் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பமும் தப்பிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளான்.

Comments