ஆதார் அட்டை இருந்தால் தான் வாகனங்களுக்கு பெட்ரோல்

தினமலர் செய்தி : நகரி : வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் போது, ஆதார் அட்டையை பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும் என, புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பாராவ் கூறினார்.
சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் மற்றும் ரேணிகுண்டா பகுதிகளில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனாரா? என, பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.


இதுகுறித்து, புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர், சுப்பாராவ் கூறுகையில், ''வாகன ஓட்டிகள், தவறாமல் ஆதார் அட்டையை, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது, அங்குள்ள ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும். வாகனங்கள் பயன்படுத்துவோர், 'ஆதார் அட்டை' வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

மேலும், ''அவர்கள் அலைபேசி எண்ணையும் கொடுக்க வேண்டும். அலைபேசியின் மூலம் ஓட்டுனர் உரிமம் காலாவதியாகும் முன், அவர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்தி வரும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்,'' என்றார்.

Comments