தினமலர் செய்தி : பெஙகளூரு : பெங்களூருவில் நாளை தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள் டுவிட் செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இன்று நடந்திருப்பது
முதல் கட்ட ஆரம்பம் தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்னி ஓட்டலில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து தப்பித்து 5 பேர் வெளியே ஓடி வந்துள்ளனர்.
பிணைக்கைதியாக ஒரு இந்தியர் : பிணைக்கைதிகளில் இந்தியர் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். அந்த நபர் ஐ.டி., துறையில் பணியாற்றி வருகிறார் என தெரிய வந்துள்ளது. இங்கு இருந்த கைதிகளை ஐ. எஸ். ஐ. எஸ்., பயங்கரவாத கொடியை ஏந்துங்கள் என வலியுறுத்தியுள்ளனர் .
பதிலடியாக பல கட்ட தாக்குதல்; சிட்னி சம்பவத்திற்கு பின்னர்
ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தங்களின் டுவிட்டரில் இந்தியாவை
எச்சரித்துள்ளனர். சமீபத்தில் ஷமி என்ற பெயரில் டுவிட்டர் நடத்திய நபர்
ஒருவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு பதிலடியாக பல கட்ட
தாக்குதலை நடத்தவுள்ளோம். தற்போது சிட்னி ஒரு ஆரம்பம் தான். பெங்களூரு
பெரும் விளைவை சந்திக்கும். இவ்வாறு எச்சரித்துள்ளனர். ஐ.எஸ்.எஸ்., ஆதரவு
நபருக்கான (இஸ்லாமிக் ஸ்டேட் மீடியா ) ஒரு டுவிட்டர் கணக்கில் இத்தகவல்
பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூரு போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
Comments