தினமலர் செய்தி : புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர்
மன்மோகன்சிங்கிடம் விசாரித்து அவரது வாக்குமூத்தை ரிக்கார்டு செய்யவும் என
சி.பி.ஐ.,க்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை இன்று சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த
விசாரணையின்போது சுரங்கத்துறையை கவனித்து வந்த முன்னாள் பிரதமர்
மன்மோகன்சிங்கிடம் ஏன் விசாரிக்க கூடாது ?
அவரது தரப்பு விளக்கத்தை ஏன்
பதிவு செய்யவில்லை. இதன் மூலம் பல உண்மைகள் கிடைக்குமே என்று நீதிபதி
கூறினார். மேலும் இது தொடர்பான விவர அறிக்கையை வரும் ஜனவரி 27ம் தேதிக்குள்
கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும்
நிலக்கரி துறை சுரங்க செயலர் பி.சி.பரேக்கிடமும் விசாரிக்க வேண்டும்
என்றும் நீதிபதி ஆணையிட்டார்.இதனையடுத்து மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆதித்யா பிர்லா குரூப் மற்றும் ஹிண்டல்கோ நிறுவனத்திற்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., முடித்து விட்டதாக கூறினாலும், இதில் மேலும் விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கோர்ட் கருதுகிறது.
இது குறித்து பா.ஜ., தலைவரான சுப்பிரமணியசுவாமி நிருபர்களிடம் கூறுகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பு வகித்த நேரத்தில் நடந்தது என்ன என்பதை மறைக்காமல் உண்மையை சொல்ல வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
இந்நிலையில்,நிலக்கரி சுரங்க விஷயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.
Comments