மின்துறையின் பெரும் ஊழலுக்கு மற்றொரு ஆதாரம் உள்ளது: கருணாநிதி

தினமலர் செய்தி : சென்னை : 'மின்துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது என்று, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் புகாருக்கு, மற்றொரு ஆதாரம் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
தனியாரிடம் செய்யும் மின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது; இதுகுறித்து விசாரித்து, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை, முதல்வர் பன்னீர்செல்வம் நீக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.மேலும், மின்துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது என, தெரிவித்திருக்கிறார். இந்த தகவலுக்கு மற்றொரு ஆதாரமாக, நடப்பு நிதியாண்டில், மின்சாரம் வாங்குவதற்கான செலவாக, 27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. இதில், மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளிமாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து, வாங்கும் விலையை விட, குறிப்பிட்ட நான்கு தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கோவன் சொன்ன கருத்துக்கு இன்னொரு ஆதாரம்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Comments