பயங்கர வெறி!

தினமலர் செய்தி : பெஷாவர்: ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு கொடூர குற்றவாளி பலரை சிறை வைத்துள்ள சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டு வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 3 பேர் பலியானதாகவும் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், உள்பட 126 பேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இன்னும் பலர் காயமுற்று இருப்பதாகவும், பலர் உயிருக்கு போராரடிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெஷாவர் முழுவதும் அபயக்குரல் கேட்ட வாறு உள்ளது. பள்ளிக்குள் 2 முறை பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. பலர் கை, கால்கள் இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது.


பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் பாக்., ராணுவ படையினர் இறங்கியுள்ளனர். பிரதமர் ஷெரீப் கண்டனம்: பயங்கரவாத செயலுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

தலிபான் பயங்கரவாதிகள் : இந்த சம்பவத்திற்கு தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 7பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதிகள் அனைவரும் ராணுவ உடையில் பள்ளிக்குள் நுழைந்தனராம். இன்னும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. 

பிரதமர் மோடி கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments