ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்ப்பு ; இந்திய இளைஞர் பெங்களூருவில் கைது

தினமலர் செய்தி : பெங்களூரு: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி இந்தியாவில் நடந்து வருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் பெங்களூருவில் டுவிட்டர் மூலம் ஆள் சேர்த்ததாக ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவரது கைது தொடர்பாக கர்நடாக டி.ஜி.பி, பச்சாவ் , போலீஸ் கமிஷனர் எம்.என் ரெட்டி பத்திரிகையாளரை சந்தித்தனர்.
இந்த சம்பவம் உண்மை தான் என முதல்வர் சீத்தராமையா உறுதி செய்துள்ளார். ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெரும் அதிகாரத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த அமைப்பினர் பெரும் அச்சுறுத்ததலை ஏற்படுத்தி, அமெரிக்கா ராணுவ வீரர்கள் இந்த படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்பை ஒழிக்க அமெரிக்கா 20 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது வீடியோவும் வெளியிட்டு மிரட்டி வருகின்றனர்.

இந்தியாவில் இந்த அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு இளைஞர்கள் கவரப்படுவதாக உள்துறை அமைச்சர் , பிரதமர் மோடி கவலை தெரிவித்திருந்தனர். பெங்களூருவில் ஐ.எஸ். ஐ.எஸ்., இயக்கம் செயல்படுவதாகவும், ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் பெங்களூருவில் குற்றப்பிரிவு போலீசார் ஐ.டி., போலீஸ் பிரிவினருடன் இணைந்து பல்வேறு கோணத்தில விசாரித்து வந்தனர்.
இதற்கென ஒருவர் டுவிட்டர் மூலம் தகவல்கள் பரிமாறியதாக சந்தேகிக்கப்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவை சேர்ந்த இன்ஞ்சினியரிங் பட்டதாரியான மெக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் , என்பவரை பிடித்துள்ளனர். இவருக்கு வயது 25. பிஸ்வாஸ் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இந்திய செயல்பாட்டளராக செயல்பட்டுள்ளார் என்றும், இவர் பலரை இந்த இயக்கத்தில் சேர்க்க முற்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் இந்த இயக்கத்து தொடர்பாளர்தான் என்பதை அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு டி.வி,. சேனல்கள் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நடாக டி.ஜி.பி, பச்சாவ் பேட்டி: இது குறித்து கர்நடாக டி.ஜி.பி, பச்சாவ், பெங்களூரு கமிஷனர் எம்.என். ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், மெக்தி பிஸ்வாஸ் மேற்குவங்கத்தை சேர்ந்தவன், இவனது தந்தை , தாயாரை 2012 முதல் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். ஷமிவிட்னஸ் என்ற பெயரில், டுவிட்டர் கணக்கு மூலம் ஆட்கள் தேர்வு செய்து இஸ்ரேல், லெபனானுக்கு அனுப்பியுள்ளான். நள்ளிரவு முதல் 60 ஜி.பி., பயன்பாட்டில் இன்டர் நெட் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான செய்திகளை பலருக்கு அனுப்பியுள்ளார். பலரை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இவன் ஆங்கிலத்தில் ஜிகாத்திகளுடன் சரளமாக பேசியுள்ளான். ஆட்கள் தேர்வு செய்து அனுப்பியதை அவன் ஒத்து கொண்டான். ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்து பிரசாரம் செய்துள்ளான். அவன் தன்னை யாரும் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு டுவிட்டரில் தன் நிலை தொடர்பாக மிக சாதுர்யமாக மறைத்துள்ளான். முறையான வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். தொடர்ந்து தேசிய அளவிலான படை பிரிவு போலீசார் விசாரிப்பர் என்றார்.
என் மகனுக்கு தொடர்பில்லை; ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக டுவிட்டர் மூலம் ஆள் சேர்த்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 24 வயது மெஹ்தி மெஹ்பூப் பிஸ்வாஸ் என்பவரது தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மகனுக்கு ஐஎஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அவனது இமெயில் முடக்கப்பட்டுள்ளது. எந்த பயங்கரவாத அமைப்புடனும் என் மகனுக்கு தொடர்பு இருக்கும் என்று கூறுவதை என்னால் நம்ப முடியாது. என் மகன் எங்களுடன் சில் மாதங்கள் தங்கி இருந்தான். அப்போது அவனுக்கு இது போன்ற வேலைகளுக்கு நேரம் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

Comments