பெல்ஜியம் அப்பார்ட்மென்டில் பரபரப்பு; துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள் ?

தினமலர் செய்தி : பிரஸ்சல்ஸ் : ஆஸி., சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ள சம்பவம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியுடன் வந்தது பயங்கரவாதிகளா என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


சிட்னி ஓட்டலில் சிக்கி உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் கை தேர்ந்த அதிகாரிகள் பேசி வருவதாக ஆஸி., போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சிட்னியில் பிணை வைத்துள்ள பயங்கரவாதிகள் சிரியாவை அல் நுஷ்ரா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிட்னி ஓட்டல் பயங்கரவாதிகள் பிடியில் ஒரு இந்தியாவின் இன்போசிஸ் ஊழியரும் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் வடக்கு பெல்ஜியம் ஹென்ட் ( டாம்பூர்ட்) பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் துப்பாக்கியுடன் சிலர் நுழைந்து அங்கிருந்த நபர்களை பிணை கைதிகளாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம் , பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். அப்பார்ட் மென்ட் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . அப்பார்ட்மென்ட் இருக்கும் சுற்றுப்பகுதி முழுவதும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பயங்கரவாத செயலா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை.

பெல்ஜியத்தில் இன்று ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் இந்த சம்பவம் ஆஸி.,யை அடுத்து மேலும் ஒரு பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments