கிரானைட் முறைகேடு குறித்து சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் மதுரையில் கடந்த வாரம் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டார்.
மீண்டும் விசாரணை :
இதற்கிடையில்
கிரானைட் முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.1388 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
அதை குவாரி நிறுவனங்களிடமிருந்து ஏன் வசூலிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம்
நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து டிச., 3 முதல் கிரானைட் குவாரி
நிறுவனத்தாரிடம் கலெக்டர் சுப்பிரமணியன், கனிம வள உதவி இயக்குனர்
ஆறுமுகநயினார் விசாரணை நடத்தினர். மீண்டும் இன்று(டிச., 10) முதல் டிச., 13
ம் தேதி வரை விசாரிக்க 50 குவாரி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளை பெரும்பாலான குவாரி நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இருப்பினும் குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வு, சோதனைகளில் அடிப்படையில் இழப்பை கணக்கிட்டு அபராதம் விதிக்க முடிவாகியுள்ளது. கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி ஏற்கனவே 77 வழக்குகள் தாக்கிலாகியுள்ளன. மேலும் 20 வழக்குகள் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்ற வழக்குகள் விசாரணையை விரைவுபடுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சென்னை, மதுரையில் மனு கொடுக்கலாம்:
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து மனுக்கள் மற்றும் தகவல்கள் சென்னை, மதுரை அலுவலகங்களில் பெறப்படுகிறது.
அறிவியல்நகரம்,
காந்தி மண்டபம் சாலை,
பிர்லா கோளரங்கம்,
சென்னை-625 025 முகவரியில் அளிக்கலாம்.
போன்: 044-2445 4054.
பேக்ஸ்: 044-2445 4034.
பூமாலை வணிக வளாகம்,
பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்,
கலெக்டர் அலுவலகம் அருகில்,
காந்திநகர்,
மதுரை-625 020 முகவரியில் அளிக்கலாம்.
போன்: 0452-253 3903.
பேக்ஸ்: 0452-253 3903.
solcgranite@gmail.com மெயிலிலும் புகார் அளிக்கலாம், என்றார்.
Comments