ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி!

ஜெயலலிதா படித்த பள்ளியில் டீச்சராகிவிட்ட நடிகை தேவயானி!Tamil.Oneindia செய்தி : சென்னையின் பிரபபல பள்ளிகளில் ஒன்றான சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார் பிரபல நடிகை தேவயானி. கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமானவர் தேவயானி. காதல் கோட்டை மூலம் முதல் நிலை நடிகையானார். அஜீத், கார்த்திக், விஜய், சரத்குமார் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார் தேவயானி.

திருமணமாகி, படங்களில் வாய்ப்புக் குறைந்ததும் சொந்தப் படம் எடுத்தார். அது கையைச் சுட்டுவிட, தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர், பின்னர் டிவியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இப்போது சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக வேலைப் பார்க்கிறார் டிவியில் நடித்துக் கொண்டே அஞ்சல் வழியில் ஆசிரியப் பயிற்சியை முடித்துள்ளார். அதற்கான செயல்முறைத் திட்டத்தை சர்ச் பார்க்கில்தான் முடித்தாராம். அதே பள்ளியில் வேலைக்கும் விண்ணப்பித்துள்ளார். ஒரு பணியிடம் காலியானதுமே அந்த வேலையை தேவயானிக்குக் கொடுத்துவிட்டார்களாம். ஆசிரியப் பணி குறித்து தேவயானி கூறுகையில், "இது எனக்கு நிறைவாக உள்ளது. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. மன நிறைவு முக்கியம். இந்த வேலையில் என் பொறுப்பில் 45 குழந்தைகள் உள்ளனற். அவர்களுக்கு பாடம் எடுப்பது மனநிறைவு தருகிறது," என்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பள்ளியில்தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments