தினமலர் செய்தி : புதுடில்லி; 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா' என்ற அமைப்பு, உலக
நாடுகளின் ஊழல் போக்கு குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. 175 நாடுகள்,
இந்த பட்டியலில் உள்ளன. இதில், கடந்தாண்டில், 94வது இடத்திலிருந்த இந்தியா,
சற்று முன்னேற்றம் கண்டு, தற்போது, 85வது இடத்தை பிடித்துள்ளது.
பட்டியலில் முதலில் இருக்கும் நாடுகள், ஊழல் குறைந்த நாடுகள். பட்டியலின்
பின்வரிசையில் இருக்கும் நாடுகள், ஊழல் அதிகமானவை.
முன்னேற்றம் ஏன்?
நிலக்கரி
சுரங்கம், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த ஊழல்களில்,
அரசியல் பெரும்புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில்
ஊழல், சற்று குறைந்துள்ளதாக, இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments