கறுப்பு பண பட்டியல் மார்ச்சுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தினமலர் செய்தி : புதுடில்லி : கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் மீதான வருமான வரி விசாரணையை வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ் வழக்கு தலைமை நீதிபதி தத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மேலும் வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மூத்த வக்கீலும், மனுதார்களில் ஒருவருமான ராம்ஜெத்மலானி தற்போதைய விசாரணை அறிக்கை விவரங்களை தனக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஜெத்மலானியி்ன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விபரங்கள் அளிப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ஷா முடிவு செய்வார் கூறினர்.

மேலும் ராம்ஜெத்மலானியின் அறிக்கை குறித்து தகவல் தெரிவித்த மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் முகுல் ரோத்தகி கூறுகையில் அவருக்கு அளிக்கப்பட்ட அறி்க்கையில் சில பகுதிகள் மறைக்கப்பட்டது குறித்து ஏன் என்பது தெரியவில்லை எனவும் தற்போது சிறப்பு புலனாய்வு அறிக்கை தரும் பட்சத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என தெரிவித்தார்.

பதினாறு ஆண்டுகளுக்கு முந்தைய வங்கி பரிவர்த்தனைகளையும் விசாரிக்கலாம் என்பதால் விழக்கு விசாரணை முடிவடைந்து விடவில்லை என முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

Comments