தினமலர் செய்தி : கராச்சி : கார்கில் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இந்தியா
இரட்டை வேடம் போடுகிறது. வங்கதேசம் உருவாக்கப்பட்டதில் இந்தியாவிற்கு
முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவுடனான நட்புறவு என்பது இரு நாடுகளும்
முன்வந்தால் மட்டுமே சாத்தியமாகும். நட்பிற்காக இந்தியா ஒரு அடி எடுத்து
வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்கும். இந்தியாவுடனான நட்புறவை
நான் தான் விரும்பவில்லை என மக்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் நான்
ஆட்சி பொறுப்பில் இருந்த போது காஷ்மீர் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு நல்ல
முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்தியா தாக்குதல் நடவடிக்கையில்
இறங்கினால் நாங்களும் அந்த வகையிலேயே எதிர்கொள்வோம் என பாகிஸ்தான் முன்னாள்
அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார்.
Comments