தினமலர் செய்தி : லக்னோ: ''அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்திய
மக்களின் விருப்பம்,'' என்று கூறிய உ.பி., கவர்னர் ராம் நாயக், உடனடியாக
பதவி விலக வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
தூக்கியுள்ளன.
மக்களின் விருப்பம்:
பைசாபாத்,
அவாத் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் பேசிய ராம் நாயக், ''எவ்வளவு
விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டி,
இந்திய மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
ஏற்கனவே உ.பி.,யில் மத மாற்றப் பிரச்னை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, அதில் எண்ணெய் ஊற்றுவது போல், ராம் நாயக்கின் பேச்சு அமைந்து விட்டது. காங்., ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வரிந்து கட்டிக் கொண்டு, ராம்நாயக் பதவி விலக வலியுறுத்தி வருகின்றன.
அதே சமயம், ராம் நாயக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவந்த், ''நாயக் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என, மக்களுக்கு உறுதி அளித்து நீண்ட காலமாகிறது. அதை விரைந்து நிறைவேற்ற சொன்னதில் என்ன தவறு?'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ., தலைவர் விஜய் பகதூர் கூறும்போது, ''ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என, அனைவரும் விரும்புகின்றனர். இந்த விருப்பம் தவறு அல்ல,'' என்றார். ''கவர்னர் பதவி யில் இருப்பவர், இது போன்று பேசுவது ஆட்சேபனைக்குரியது,'' என, என்.சி.பி., தலைவர் தாரிக் அன்வர் கூறிஉள்ளார்.

நெருக்கடி:
''அது, ராம்நாயக்கின் தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அதை வெளியே சொல்லக் கூடாது. ஏனென்றால், அவர் ஒரு மாநில கவர்னர்; ஆர்.எஸ்.எஸ்., அல்லது பா.ஜ., உறுப்பினர் அல்ல,'' என்று, சமாஜ்வாதி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்தார். நேற்று, எதிர்க்கட்சிகள் இதே பிரச்னையை பார்லி.,யிலும் எழுப்பி, ராம்நாயக் பதவி விலக கோரி கோஷமிட்டன. ராமரால் ராம்நாயக் நெருக்கடிக்கு ஆளாகிஉள்ளார்.
Comments