தினமலர் செய்தி : புதுடில்லி : தற்கொலை முயற்சியை குற்றமாக கருதும் சட்ட உட்பிரிவு 309 ஐ
இந்திய சட்டப் புத்தகத்தில் இருந்து மத்திய அரசு நீக்க முடிவெடுத்துள்ளது.
இதன்படி இதுவரை இருந்து வந்த தற்கொலை முயற்சிக்கான தண்டனையும் ரத்து
செய்யப்படும்.
தற்கொலை முயற்சி குற்றம் என கருதப்பட்டு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309ன் கீழ் அதற்கு ஓராண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதனை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு 18 மாநில மற்றும் 4 யூனியன் பிரதேச அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக லோக்சபாவில் இன்று பேசிய மத்திய இணையமைச்சர் கிரன் ரிஜிஜூ, ஆகஸ்ட் மாதம் இந்திய சட்ட கமிஷன் தாக்கல் செய்த 210வது அறிக்கையின்படி தற்கொலை முயற்சி மனித தன்மையற்ற செயலல்ல எனவும் குற்ற செயல் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 309 சட்டப்பிரிவை சட்ட புத்தகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்க பரிந்துரை செய்கிறேன் என தெரிவித்தார்.
Comments