தினமலர் செய்தி : புதுடில்லி : ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள்
வெளியானதை அடுத்து ஆங்கில செய்தி "டிவி' சேனல்களில் பல்வேறு கட்சி
தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துகள்:
குலாம் நபி ஆசாத் (காங்.,): மிஷன் 44 என்ற பா.ஜ.,வின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. மோடி அலை வீசவில்லை என்பதையே காஷ்மீர் முடிவுகள் காட்டுகின்றன.
ரவிசங்கர் பிரசாத் (பா.ஜ.,): இதுவரை இல்லாத வகையில் ஜார்க்கண்டிலும் காஷ்மீரிலும் மக்கள் கொடுத்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பாடுபடுவோம். காஷ்மீர் ஆட்சி அமைப்பது பற்றி கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்ய முடியும். பிரதமராக மோடியின் செயல்பாடுகளை பார்த்த ஜார்க்கண்ட் மக்கள், மாநிலத்திலும் அதே போன்ற ஒரு பா.ஜ., ஆட்சி ஏற்பட வேண்டும் என ஓட்டளித்துள்ளனர்.
அனுராதா பாசின் (மூத்த பத்திரிகையாளர்): காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர். ஏனெனில் இக்கட்சியினர், வகுப்பு வாத காரணத்தைக் கூறி மக்களைப் பிரிக்கப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. பாகிஸ்தானிடம் இருந்து மோடி தான் நம்மைக் காப்பாற்ற முடியும் என காஷ்மீர் மக்கள் நம்புவதையே இது காட்டுகிறது.
ஜோதி மல்கோத்ரா (பத்திரிகையாளர்); காஷ்மீரில் என்ன செய்வது என தெரியாமல் பா.ஜ., குழப்பத்தில் உள்ளது. ஆனால், இதுவரை காஷ்மீரில் தேர்தலை புறக்கணித்து வந்த முஸ்லிம்கள், இந்த தேர்தலில் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். ஓட்டு சதவீதத்தைப் பார்த்தாலே இது புரியும். பயங்கரவாதிகளுக்கும் மக்கள் பயப்படவில்லை. காஷ்மீரில் பல விஷயங்கள் மாறி வருகின்றன.
Comments