பிரதமர் மோடியை கைது செய்யலாமா ? மே.வங்க முதல்வர் அதிரடி கேள்வி

தினமலர் செய்தி : கோல்கட்டா : சாரதா சிட்பண்ட் வழக்கில் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கோபாவேசத்தில் இருக்கிறார். சி.பி.ஐ., தமக்கு எதிராக சதி வலை பின்னி வருவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாவும் இது போன்ற நடவடிக்கையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய சகாரா நிறுவனருடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிரதமர் மோடியை கைது செய்ய முடியுமா என உச்ச ஸ்தாயிக்கு சென்று மம்தா கொக்கரித்துள்ளார். சாரதா சிட்பண்ட் மோசடியில் மேற்குவங்க திரிணாமூல் காங்., கட்சியை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ராவின் கைதுக்கு எதிர்ப்புக்கு எதிராக மம்தா இன்று கோல்கட்டாவில் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் இவ்வாறு மம்தா பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது: சாரதா சிட்பண்ட் ஊழலில் என்னை தொடர்பு படுத்தி பேசும் பிரதமர் மோடி, சகாரா நிறுவன தலைவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளாரே. அப்படியானால் அவரை கைது செய்யலாமா? மேலும் சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய், பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் நிரூபிக்கப்பட்டால் பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Comments