OneIndia News : டெல்லி: பாகிஸ்தானின், பெஷாவரில் நடத்தப்பட்டது கோழைத்தனமான தாக்குதல்
என்று பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இன்றைய
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறேன். உங்களின் வலியை நாங்களும் உணர்ந்துள்ளோம்.
இவ்வாறு மோடி
கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரிலுள்ள ராணுவ பள்ளியில் புகுந்த
தீவிரவாதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய தாக்குதலில் குழந்தைகள்
உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: பெஷாவர் பள்ளிக்கூடத்தில்
நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அறிவற்ற
இந்த தாக்குதலால் குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவிகள் உயிர் பறிபோயுள்ளது.
இன்றைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடுபத்தாருக்கு எனது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வலியை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
Comments