தினமலர் செய்தி : சென்னை : மதுவிலக்கு வேண்டுமா, இல்லையா என்பது, கொள்கை முடிவுக்கு உட்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வாகன
விபத்து வழக்கில், தீர்ப்பாயம் விதித்த இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக்
கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பலியானவர்களின் குடும்பத்தினர்,
மனுக்கள் தாக்கல் செய்தனர்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் விபத்து
நடந்ததாக, போக்குவரத்து கழகம் தரப்பில், தீர்ப்பாயத்தில்
தெரிவிக்கப்பட்டது.மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக் கூடாது; 'பார்'களை ஏன் மூடக் கூடாது என,
மத்திய, மாநில அரசுகளுக்கு, 16 கேள்விகளை எழுப்பி, பதிலளிக்குமாறு,
நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.பொது நலன் குறித்து பிரச்னை
எழுப்பப்பட்டிருந்ததால், இழப்பீடு அதிகரிக்கக் கோரிய, 'அப்பீல்' மனுவை, தனி
நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டு, பொது நலன் பிரச்னையை, தலைமை நீதிபதி
அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரணைக்கு எடுத்தது.
இவ்வழக்கில், 'முதல்
பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தனி நீதிபதி எழுப்பியுள்ள, 16 கேள்விகளை,
நாங்கள் பார்த்தோம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமா, இல்லையா என்பது,
கொள்கை முடிவுக்கு உட்பட்டது.குடித்து விட்டு, வாகனங்களை ஓட்டி,
விபத்துகளை ஏற்படுத்தி, உயிர்பலி நடப்பது தான், வருத்தப்பட வேண்டிய விஷயம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளின்படி, சில கட்டுப்பாடுகள்
உள்ளன.மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், இந்தப் பிரச்னைக்கு பதில் கூற
வேண்டும்.
Comments