தினமலர் செய்தி : மும்பை: நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக, பாலிவுட்
டைரக்டர் சச்சேந்திர சர்மாவை, மனீஷா என்ற நடிகை, பட விழாவில், ஏராளமானோர்
முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்:
பாலிவுட்டின் பிரபல டைரக்டர் சச்சேந்திர சர்மா. இவர், 'மும்பை கேன் டான்ஸ்
சலா' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், பிரபல குத்தாட்ட நடிகை ராக்கி
சாவந்தும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மும்பையில்
நடந்தது. விழாவுக்கு, ராக்கி சாவந்த், தன் தோழி மனீஷாவுடன் வந்திருந்தார்.
மனீஷாவும் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். விழா
நடந்து கொண்டு இருந்தபோது, வேகமாக மேடைக்கு வந்த மனீஷா, டைரக்டர்
சச்சேந்திர சர்மாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 'நடிக்க வாய்ப்பு
தருவதாகக் கூறி, என்னை ஏமாற்றியது ஏன்?' என, கேள்வி எழுப்பினார்.
இருவருக்கும் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மனீஷா, ஒரு கட்டத்தில்,
டைரக்டரை, கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதைப் பார்த்து, அந்த விழாவுக்கு
வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். கடும் ஆத்திரமடைந்த
டைரக்டர், பதிலுக்கு, மனீஷாவை பிடித்து, மேடைக்கு கீழே தள்ளினார். அப்போது,
விழாவுக்கு வந்திருந்த மேலும் சில பெண்கள், மனீஷாவை சூழ்ந்து கொண்டு
தாக்கினர்; அவரின் தலை முடியை பிடித்து இழுத்தனர். இதனால், அந்த இடமே,
பெரும் களேபரம் ஆனது. இதையடுத்து, மனீஷாவும், ராக்கி சாவந்தும், போலீஸ்
ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர்.
தவறான குற்றச்சாட்டு:
அதில்,
'நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், என் ஆசைக்கு இணங்க வேண்டும், என, டைரக்டர்
சச்சேந்திர சர்மா கேட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி
ஏமாற்றி விட்டார். இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற என்னை, ஆட்களை
வைத்து தாக்கி விட்டார்' என, மனீஷாவின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கி சாவந்தும், தன் தோழிக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளார். இதைத்
தொடர்ந்து, டைரக்டரின் மனைவியும், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,
'என் கணவர் மீது, மனீஷாதவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதோடு, பொது இடத்தில்
அவரை தாக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
தெரிவித்துள்ளார்.
Comments