காஷ்மீரில் அடுத்தது என்ன ? அனைத்து கட்சியினரும் ஆலோசனை


தினமலர் செய்தி : புதுடில்லி: சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இங்கு யார் ஆட்சி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது . காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திரசிங் , அருண்ஜெட்லி முக்கிய ஆலோசனை நடத்தினர். இன்று மதியம் பா.ஜ., தலைவர் அமித்ஷா நிருபர்களை சந்திக்கவுள்ளார்.
கட்சியின் அடுத்க்கட்ட நடவடிக்கை என்பது குறித்து விளக்கவுள்ளார். இந்நிலையில், பி.டி.பி., கட்சி ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்டு, பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்கிடையில் காஷ்மீர் தேர்தலில் மோடி அலை வீசியதா இல்லையா என்று எதிர்கட்சியினர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மாநிலத்தில் தற்போது கூடுதல் இடங்களை பிடித்து வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த நிர்வாகி அகம்மது யாஷ் , கூறுகையில், காஷ்மீரில் மோடி அலை வீசியது என்பதை ஏற்று கொள்கிறோம் என்றார். ஆனால் காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது. மோடி பணம் கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்றுள்ளார். என்று கூறியுள்ளது.

Comments