99% பாகிஸ்தானியர்கள் நல்லவர்கள் : கட்ஜூ

தினமலர் செய்த : புதுடில்லி : பாகிஸ்தானியர்களில் 99 சதவீதத்தினர் நல்லவர்கள், ஒரு சிலர் மட்டுமே நாட்டை சீரழித்து வருவதுடன் தவறான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சுக்களை வழக்கமாக கொண்டுள்ள கட்ஜூ, மும்பை தாக்குதல் குற்றவாளி ஜாகிர் உர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் கோர்ட் ஜாமின் வழங்கியது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் இத்தகைய கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் 99 சதவீதம் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களை போன்று நல்லவர்கள் என தெரிவித்துள்ளார்.

Comments