தினமலர் செய்தி : வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பள்ளியில் படித்த 6ம்
வகுப்பு மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதே பள்ளியில்
படித்து வந்த மாணவர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தில்
ஈடுபட்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர்.
12 வயது கொண்ட மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம்
வேலூர் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் கடந்த
டிசம்பர் மாதம் 16 ம்தேதி டில்லி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட அதே நாளில்
தமிழகத்தில் இப்படியொரு துயரச்சம்பவம் நடந்துள்ளது.
குடியாத்தம் அருகே புதூர் தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரது மகள் கீர்த்திகா ( வயது12). நேற்று பள்ளி சென்று வீடு திரும்பவில்லை.
இவரை இவரது பெற்றோர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவி கே.விகுப்பம்,
கல்லாபெரியாங்குப்பம் மாந்தோப்பில் பிணமாக கிடந்தார். கை கால்கள், வாய்
கட்டப்பட்ட நிலையில் பிணமாக இருந்தார். மேலும் உடலில் கத்திக்குத்துக்கள்
இருந்தன. தகவல் அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வரும் விவரம் வருமாறு :
சைக்கிளில் வந்த சிலர் : மாணவி கீர்த்திகா மதியம் சாப்பாட்டிற்காக வீடு சென்று திரும்பியபோது சைக்கிளில் வந்த இவரை சிலர் வழிமறித்துள்னளர். தொடர்ந்து சைக்கிள், டூ வீலரில் ஏற்றி சென்றுள்ளனர். மறைவிடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் வெளியே தெரிந்து விடுமோ என்ற பீதியில் அந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் நாய் மற்றும் தடய நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விட்டுள்ளனர், இளம் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் சுற்று பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments