நேற்று ஆஸி., இன்று பாகிஸ்தான் ; பிணைக்கைதிகளாக 500 மாணவர்கள்

தினமலர் செய்தி : பெஷாவர்: ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு கொடூர குற்றவாளி பலரை சிறை வைத்துள்ள சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டு வருகின்றனர். இதில் முதல் கட்டமாக 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 3 பேர் பலியானதாகவும் தெரிகிறது. பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.


பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தெக்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பள்ளிக்குள் 7 பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Comments