5 ஆண்­டு­களில் முதன் முறை­யாகநாட்டின் பண­வீக்கம் பூஜ்யம்

தினமலர் செய்தி :  புது­டில்லி : உணவுப் பொருட்­களின் விலை சரிவால், மொத்த விலை குறி­யீட்டு எண் அடிப்­ப­டை­யி­லான நாட்டின் பண­வீக்கம், கடந்த நவம்­பரில் பூஜ்­ய­மாக குறைந்­துள்­ளது. இது, அக்­டோ­பரில், 1.77 சத­வீ­த­மாக இருந்­தது.கடந்த ஐந்­தரை ஆண்­டு­களில், இந்த அள­விற்கு பண­வீக்கம் குறைந்­துள்­ளது, இதுவே முதன்­மு­றை­யாகும். கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில், மொத்த விலை பண­வீக்கம், மைனஸ் 0.3 சத­வீ­த­மாக இருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
கடந்த ஆண்டு நவம்­பரில், பண­வீக்கம், 7.52 சத­வீ­த­மாக உயர்ந்து காணப்­பட்­டது.மதிப்­பீட்டு மாதத்தில், உணவுப் பண­வீக்கம், மூன்று ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 0.63 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. எரி­பொருள் மற்றும் மின்­சக்தி பண­வீக்கம், 2009ம் ஆண்­டுக்கு பின், 4.91 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது.அதே சமயம், தயா­ரிப்புத் துறை பண­வீக்கம், 2.04 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.நவம்­பரில், மொத்தம் மற்றும் சில்­லரை விலை பண­வீக்­கமும், அக்­டோ­பரில், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்­சியும் குறைந்­துள்­ளது.இவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, குறு­கிய கால கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­களை குறைக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Comments