தினமலர் செய்தி : புதுடில்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டு
நாள் சுற்றுப் பயணமாக டில்லி வருகிறார். நாளை, பிரதமர் நரேந்திர மோடியுடன்,
அணுசக்தி, ராணுவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து
செயல்படுவது தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.
கையெழுத்து: அப்போது, கூடங்குளத்தில், மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கையெழுத்து: அப்போது, கூடங்குளத்தில், மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா புறப்படுவதற்கு முன், மாஸ்கோவில், புடின் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிர்வாக திறமைமிக்க தலைவரான மோடியின் கீழ் புதிய அரசு அமைந்து உள்ளது.இந்த ஆட்சி மாற்றத்தால், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை.
நல்லுறவு:
இரு
நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. எதிர்காலத்திலும்,
அந்த நல்லுறவு நீடிக்கும்.கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமையவுள்ள புதிய
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை ரஷ்யாவே வழங்குமா
என்பது பற்றி, தற்போது எந்த பதிலும் தெரிவிக்க முடியாது.இவ்வாறு, அவர்
கூறினார்.
Comments