பார்லி., தாக்குதல் 13வது நினைவுநாள் : பிரதமர் - தலைவர்கள் மரியாதை


தினமலர் செய்தி : புதுடில்லி: கடந்த 2001 ல் பார்லி., மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 13 வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது உயிர்நீத்த ராணுவ வீரர்கள் 9 பேர் தியாகத்தை நினைவுகூறும் வகையில் துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் , துணை சபாநாயகர் தம்பித்துரை , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பார்லி.,யில் மறைந்த தியாகிகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்கிட மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடியுடன் காங்., தலைவர் சோனியாவும் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அத்வானி வருத்தம் : இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது , பாகிஸ்தான் , பயங்கரவாத ஆதரவு செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. அவ்வாறு அவர்கள் நடந்து கொள்ள வில்லை. இது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார்.

நெஞ்சில் நிலைத்திருக்கும் : நமது ஜனநாயகத்தின் கோயிலான பார்லி.,யை காத்து உயிர்நீத்த தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் நினைவு என்றும் மறையாமல் நெஞ்சில் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments