தினமலர் செய்தி : சிட்னி: ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் ஓட்டலில் பயங்கரவாதி ஒருவன் பொது
மக்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளான. காலை 5 பேர் தப்பி வந்தனர்.
இந்நிலையில் அங்கிருந்து மேலும் 6 பேர் தப்பியுள்ளதாக செய்தி
வெளியாகியுள்ளது. இதனையடுத்துஅங்கிருந்து தப்பி வந்தவர்களின் எண்ணிக்கை 11
ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, அந்த உணவகத்திற்குள் நுழைய போலீசார் முயற்சி
செய்து வருகின்றனர். இதனையடுத்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெறுவதாக
கூறப்படுகிறது. இதனிடையே, வெடிகுண்டு தடுப்புபிரிவினரும் அந்த ஓட்டலுக்குள்
நுழைய முயற்சி செய்கின்றனர்.
Comments