இது, நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பிக்க உள்ள, 2015-16ம் நிதியாண்டு பட்ஜெட்டில், குறிப்பிடத்தக்க அளவு, நிதிச் செலவின ஒதுக்கீட்டை குறைக்க உதவும்.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 40 சதவீதம் குறைந்து, 60 டாலர் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
இறக்குமதி:
இந்தியா,
நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.
இதற்காக, நடப்பு 2014-15ம் நிதியாண்டில், 5.44 லட்சம் கோடி ரூபாய்
செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலை, வரும்
நிதியாண்டிலும் இதே நிலையில் நீடிக்கும்பட்சத்தில், இதன் இறக்குமதி செலவு,
1.11 லட்சம் கோடி ரூபாய் குறையும். இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,
0.9 சதவீதமாகும்.கச்சா எண்ணெய் விலை இறங்கியுள்ள நிலையில், மத்திய அரசு,
கடந்த மாதம் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரியை இரு முறை
உயர்த்தியது.இதனால், மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் 9,900 கோடி
ரூபாயும், வரும் நிதியாண்டில், 30,935 கோடி ரூபாயும் கிடைக்கும் என, மத்திய
நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத இறக்குமதி வரி, கடந்த 2011ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 24,748 கோடி ரூபாய், அரசுக்கு கிடைக்கும்.இந்த வகையில், மொத்தத்தில், மத்திய அரசுக்கு, 99,610 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கச்சா எண்ணெய் மீதான 5 சதவீத இறக்குமதி வரி, கடந்த 2011ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 24,748 கோடி ரூபாய், அரசுக்கு கிடைக்கும்.இந்த வகையில், மொத்தத்தில், மத்திய அரசுக்கு, 99,610 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சேமிப்பு:
ஆக,
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு,
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்க உள்ள வரி உள்ளிட்டவற்றின் மூலம்,
மத்திய அரசுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சேமிப்பு
கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிப்பு:
கண்டுபிடிப்பு:
*ஓ.என்.ஜி.சி., நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகை மற்றும் மும்பை கடற்பகுதியில், மூன்று இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம்
உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
*இந்நிறுவனம், பங்குதாரர்களுக்கு, 5 ரூபாய் முக மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு, 100 சதவீதம், அதாவது 5 ரூபாய், இடைக்கால டிவிடெண்டு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
*இந்த வகையில், மத்திய அரசுக்கு, இடைக்கால டிவிடெண்டு தொகையாக, ரூ.2,948 கோடி கிடைக்கும்.
Comments