தினமலர் செய்தி : புதுடில்லி: இலங்கை கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற 5 தமிழக
மீனவர்களை மீட்பது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இன்று
டில்லி சென்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜை சந்திக்கின்றனர். மீனவர்கள் சிறைத்தண்டனை ரத்து,மீனவர்களை
தமிழகத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கின்றனர்.
கடந்த 2011ல் போதை பொருள் கடத்தியதாக ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட் தூக்கு தண்டனை அறிவித்தது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் மீனவ பகுதிகளில் பதட்டம் நிலவியது. இந்நிலையில் மீனவர்களை காத்திட பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் கொடுத்தனர். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என கடந்த வாரம் இலங்கை அமைச்சர் தொண்டைமான் தெரிவித்தார். ஆனால் அரசு தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு டில்லி சென்றது. ராமேஸ்வரம், நாகை, மாவட்ட மீனவ சங்கத்தினர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அமைச்சரை சந்தித்து தங்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்கின்றனர்.
Comments