நீண்டகால புகார்:
இந்தியர்களால், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.கறுப்பு பணம் குறித்து விசாரிப்பதற்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்.ஐ.டி., தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:எந்த ஒரு தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ, அமைப்போ, அறக்கட்டளையோ, கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக, பொதுமக்கள் யாருக்காவது தகவல் தெரிந்திருந்தால் அல்லது கிடைத்தால், அதுபற்றி விவரத்தை எங்களுக்கு தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். முறையான தகவல்கள் எதுவும் இல்லாமல், வெறும் குற்றச்சாட்டு மட்டும் கூறப்பட்டால், அதை ஏற்க மாட்டோம்.
தபால் மூலம்...:
எஸ்.ஐ.டி.,யின்
இணைச் செயலருக்கு தபால் மூலமாக இந்த விவரங்களை தெரிவிக்கலாம்.
sitrev@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கும் விவரங்களை அனுப்பி
வைக்கலாம்.இவ்வாறு அனுப்பும்போது, பெயர், முகவரி, மொபைல் போன் எண்,
பாஸ்போர்ட் விவரம், பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்து குறித்த விவரங்களை
தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments