தினமலர் செய்தி : காஞ்சிபுரம்: 'தமிழக ஆட்சியாளர்களுக்கு, வெட்கம், சூடு, சொரணை எதுவுமே இல்லை' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரத்தில், திருமண விழா ஒன்றில், ஸ்டாலின் பேசியதாவது:சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதை,
சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சட்டப்பேரவை செயலர்
முறைப்படி அறிவிக்கவில்லை.காஞ்சிபுரத்தில், திருமண விழா ஒன்றில், ஸ்டாலின் பேசியதாவது:சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்ட உடன், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று, இணையதளம் மூலமாக சட்டமன்ற செயலர் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜெயலலிதா பதவி பறிக்கப்பட்டதால், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருக்கிறது என சொல்வதில், அறிவிப்பதில் என்ன கஷ்டம்? ஏன் ஒளிந்து, மறைய வேண்டும்.இதெல்லாம், அரசுக்கு வெட்கக்கேடான சம்பவங்கள். மொத்தத்தில், இந்த அரசுக்கும் வெட்கம், சூடு, சொரணை எதுவுமேயில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
Comments