புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் நாமக்கல் மாவட்ட உதவி இயக்குனர், முருகானந்தம், சென்னை சுரங்கத் துறை கமிஷனர் அலுவலக, உதவி இயக்குனர் சுதர்சனம், திருவள்ளுவர் மாவட்ட, உதவி புவியியலாளர் பெருமாள் ராஜா, புதுக்கோட்டை மாவட்ட உதவி புவியியலாளர் ரமேஷ் ஆகிய நால்வரும், சகாயத்திற்கு உதவியாக அனுப்பப்படுகின்றனர்.
மேலும், தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தெரிந்த ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஒருவர், ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், வருவாய் உதவியாளர் இருவர், பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற தாசில்தார் அல்லது துணை தாசில்தார் இருவர், துணை கலெக்டர் நிலையில் இருவர், மூன்று கார்கள், வீடியோ மற்றும் போட்டோ கிராபர்கள் மற்றும் தேவையான தளவாட பொருட்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்க, மதுரை கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர, சகாயம் குழுவினருக்கு தேவையான தங்கும் வசதிகள் வழங்கவும், ஆலோசனை கூட்டம் நடத்தவும், பயணத்திற்கான எரிபொருள், வாகனங்கள் மற்றும் அலுவலக செலவுகளுக்கு குழுவினர் கேட்கும் தொகையை வழங்கவும் மதுரை கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சகாயத்திற்கு அலுவலகம் தேர்வு:
மதுரை
மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து நவ.,10 ல் விசாரணையை
துவக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் அலுவலகத்திற்கு இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் நேற்று
முதல் அளிக்கப்பட்டுள்ளது.ஐகோர்ட் உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் நடந்த
கிரானைட் முறைகேடுகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவ.,10 முதல்
அவர் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். அவரது
பணிகளுக்கு உதவி செய்ய 2 துணை கலெக்டர்கள், 2 தாசில்தார்கள், 2
புவியியலாளர்கள், 4 பணியாளர்கள், ஒரு டைப்பிஸ்ட், ஒரு போட்டோகிராபர்,
ஒருவீடியோகிராபர் என 14 பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர். இதற்கான நபர்களை சகாயமே
தேர்வு செய்து கொள்ளலாம்.இவரும், இவரது 'சகா'க்களும் பணியாற்ற மதுரையில்
உள்ள பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின்
வணிகவளாக முதல் தளத்தில் உள்ள அறைகள் தயாராகி வருகின்றன. நேற்று அவை
சுத்தப்படுத்தப்பட்டன.இதை தவிர, விமானநிலைய ஓடுபாதைக்கான நிலம்
கையகப்படுத்தும் அலுவலகம், தமிழ்வளர்ச்சித்துறைக்கான இரு அறைகளில் ஒன்று,
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சேம்பருக்கு அருகில் உள்ள அறை( முன்பு
இந்த அறை அன்சுல்மிஸ்ரா கலெக்டராக இருந்த போது, தோண்டப்பட்ட கிரானைட்களை
அளக்க தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜான்லூயிசிற்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது தேர்தல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளது) ஆகிய 3 இடங்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளன. இவற்றில் விரும்பிய இடத்தை சகாயம் தேர்வு செய்யலாம்.
ஆனால் கலெக்டர் அலுவல பணியாளர்களோ, சகாயம் ஏற்கனவே மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர். இவர் எங்கு சென்றாலும் மக்களிடம் மனு வாங்குவது வழக்கம். தற்போது கிரானைட் முறைகேடு ஆய்வுப்பணிக்கு வரும் அவருக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டால், அவரிடம் மக்கள் தங்கள் குறைதீர் மனுக்களை அளிக்க நேரிடும். இதனால் வீண் குழப்பம் ஏற்படுவதை தடுக்க அவருக்கு பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலுவலகம் ஒதுக்குவது நல்லது என்றனர்.
ஆனால் கலெக்டர் அலுவல பணியாளர்களோ, சகாயம் ஏற்கனவே மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர். இவர் எங்கு சென்றாலும் மக்களிடம் மனு வாங்குவது வழக்கம். தற்போது கிரானைட் முறைகேடு ஆய்வுப்பணிக்கு வரும் அவருக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டால், அவரிடம் மக்கள் தங்கள் குறைதீர் மனுக்களை அளிக்க நேரிடும். இதனால் வீண் குழப்பம் ஏற்படுவதை தடுக்க அவருக்கு பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலுவலகம் ஒதுக்குவது நல்லது என்றனர்.
Comments