நிலக்கரி சுரங்க வழக்கு தொடர்பான விசாரணை இன்று டில்லி சிறப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணையில் நீதிபதி சி.பி.., அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தார்.
நீதிபதி சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீலிடம் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். 2005 ல் சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது மன்மோகன்சிங் இத்துறைக்கான அமைச்சராக இருந்துள்ளார். இவரிடம் ஏன் விசாரிக்கவிலலை ? பிரதமர் அலுவலக அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்பதில் பிரதமராக இருந்தவர் சுணக்கமாக இருந்தது ஏன் ? நிலக்கரி துறை அமைச்சரிடம் விசாரிக்கப்பட வேண்டும் என பிரதமராக ( மன்மோகன்சிங்) இருந்தவர் ஏன் நினைத்து பார்க்கவில்லை ? பிரதமரிடம் ஏன் விசாரிக்க கடந்த அரசு அனுமதிக்கவில்லை ? பிரதமரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஏன் சி.பி.ஐ., கருதவில்லை ? இந்த விசாரணை எவ்வளவு முக்கியம் என்பதை சி.பி.ஐ., ஏன் உணரவில்லை ? என கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சி.பி.ஐ., தரப்பு, பிரதமர் மற்றும் அமைச்சரை விசாரணைக்குட்படுத்த முடியாது என்று பதில் அளித்தது. தொடர்ந்து கோர்ட்டில் இன்னும் தாக்கல் செய்யப்படாத அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Comments