பெயரளவிற்கு செயல்படும் தமிழக அரசு: கருணாநிதி

தினமலர் செய்தி : சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு பெயரளவிற்கு செயல்படுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வெளியிட்ட அறிவிப்புகளை கூட, தற்போதைய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டவில்லை. கிரானைட் முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன். இந்த குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்வது, நீதிமன்ற அவமதிப்பு ஆகும். டெல்டா பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால், பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. தமிழக அரசின் வாட் வரியால்,சர்க்கரைவிலை உயர்ந்துள்ளது. சீனாவுடன் நட்பு கொண்டுள்ள இலங்கையுடன் உறவு வைத்துள்ளது எங்கே போய் முடியுமோ என கூறியுள்ளார்.

Comments