தினமலர் செய்தி : சென்னை: கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக மதுரையில் மட்டும் சகாயம்
விசாரணை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. கிரானைட் முறைகேடு
தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமிக்க சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மதுரையில் மட்டும் விசாரணை
நடத்துவதா, அல்லது தமிழகம் முழுவதும் விசாரணை நடத்துவதா என விளக்கமளிக்க
வேண்டும் எனக்கோரி சகாயம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த
வழக்கு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரையில்
கிரானைட் குவாரிகள் முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் போதும் எனவும்,
ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டாம் எனவும்,
படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்தி கொள்ளலாம் எனவும், சகாயம் கேட்கும்
அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Comments