இந்தியா அதிருப்தி: சீனா மழுப்பல்

தினமலர் செய்தி : பீஜிங்: இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தியாவின் எச்சரிக்கையும் மீறி, சீன கப்பல்களை, தங்கள் துறைமுகத்தில் நிறுத்த, இலங்கை அனுமதி அளித்தது. இதுகுறித்து மத்திய அரசு அதிருப்தியை தெரிவித்திருந்தது.

இதற்கு 'எரிபொருள் நிரப்புவதற்காகவே, இலங்கை துறைமுகத்தில் எங்களின் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; இது, வழக்கமான நடவடிக்கை தான்' என, சீனா மழுப்பியிருக்கிறது.வெளிநாடுகளின் துறைமுகங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக, மற்ற நிறுவனங்களின் கப்பல்கள் நிறுத்தப்படுவது, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடவடிக்கை தான்.இவ்வாறு, சீனா கூறியிருக்கிறது.
இலங்கை அரசு அளித்துள்ள விளக்கத்தில்,'கடந்த, 2010லிருந்து, 230க்கும் அதிகமான போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்துள்ளன. இது, நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கை தான்' என, தெரிவித்துள்ளது.

Comments