தினமலர் செய்தி : புதுடில்லி : ஜப்பான் நாட்டின் உயரிய தேசிய விருதுக்கு, முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - ஜப்பான் இடையேயான
உறவை பலப்படுத்த, அவர் சிறப்பான பங்காற்றிய தற்காக, இந்த விருது
வழங்கப்படுகிறது.
'தி கிராண்ட் கார்டன் ஆப் த ஆர்டர் ஆப் த பவ்லோவ்னியா பிளவர்ஸ்' என்ற, இந்த விருதை பெறும் முதல் இந்தியர், மன்மோகன் சிங்கே. இத்தகவல், டில்லியில் உள்ள, ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் உயரிய விருது அறிவிப்பு பற்றி, மன்மோகன் சிங் கூறியதாவது: ஜப்பான் அரசும், அந்நாட்டு மக்களும், என் மீது காட்டியுள்ள அன்பு மற்றும் நேசத்திற்கு நன்றி. அவர்கள் எனக்கு அளித்துள்ள கவுரவத்தை பணிவுடன் ஏற்கிறேன்.இந்தியா - ஜப்பான் இடையேயான உறவுகள் வளர வேண்டும்; இரு நாடுகளும் வளம்பெற வேண்டும் என்பது என் கனவு. இந்த நோக்கத்திலேயே, நான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும், பொது வாழ்வில் இருந்த போதும், பிரதமராக பதவி வகித்த போதும் செயல்பட்டேன்.இவ்வாறு, மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
Comments