தினமலர் செய்தி : ''மாநில பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து, நான் ஆரம்பிக்கும் புது கட்சி
பாடுபடும். கட்சியின் பெயர் மற்றும் கொடி, விரைவில் அறிவிக்கப்படும்,'' என,
முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு, வாசன் அளித்த பேட்டி:
காமராஜரின் நேர்மை, எளிமை, தூய்மையோடு செயல்பட்டு, தமிழக மக்களுக்கு
நம்பிக்கை அளிக்கும் வகையில், புதிய அரசியல் பாதை வகுத்து, அதன்
அடிப்படையில் மக்களுக்காக பணியாற்றுவோம்.மாநில பிரச்னைகளுக்கு முன்னுரிமை
அளிப்பதோடு, ஜனநாயகத்தில் இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கின்ற வகையில்,
எங்களது புதிய இயக்கம், தன் பணியை துவங்கும்.இதுவே, தமிழகம் முழுவதும்
உள்ள தொண்டர்களின் கோரிக்கை.காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும்
அடிப்படையில் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், அதை அடையும் பாதை, வழிமுறை வேறாக
இருக்கும்.சென்னையில் நிருபர்களுக்கு, வாசன் அளித்த பேட்டி:
தமிழக இளைஞர்கள், அரசியலில் ஒரு புதிய விடியலைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். அதற்காகவே நாங்கள், புது இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம். எங்கள் புதிய கட்சியின் பெயரும், கொடியும் விரைவில், திருச்சியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். காங்கிரஸ் மேலிடத்தால், கட்சியில் இருப்பவர்களில் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அளவிட முடியவில்லை.
அதனால் தான், தகுதிவாய்ந்த பலருக்கும் பொறுப்புகள் கிடைக்கவில்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும், அதில் தெளிவான முடிவெடுப்பதில்லை.லோக்சபா தேர்தலில், 6,000 கி.மீ., தூரம் பிரசாரம் சென்றேன். அதனால் தான், நான் போட்டியிடவில்லை. அதேசமயம் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் எனவும் சொல்லவில்லை. தேர்தலில் வெற்றி மட்டுமே ஒருவரின் தகுதியை நியமிப்பதில்லை.தமிழக காங்கிரசை பலப்படுத்தி, சுதந்திரமாக செயல்பட மேலிடம் அதிகாரம் வழங்கவில்லை.இவ்வாறு, வாசன் கூறினார்.
Comments