தினமலர் செய்தி : புதுடில்லி: கறுப்பு பணம் திரும்ப கொண்டு வருவதில் மத்திய அரசு போதிய
நடவடிக்கை எடுக்கவில்லை என இது குறித்து விவாதிக்க வேண்டும் கேள்வி நேரத்தை
ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்கட்சியினர் சபாநாயகரிடம் நோட்டீஸ்
வழங்கியுள்ளனர். எதிர்கட்சியினர் அமளி காரணமாக இரு அவைகளும் 2 முறை ஒத்தி
வைக்கப்பட்டது.
பார்லி., துவங்கும் முன்பு லோக்சபா வளாகத்தில் திரிணாமுல் காங்.,
எம்.பி.,க்கள் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இரு அவைகளும் துவங்கியதும் , காங்., சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம். பி.,க்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கூச்சல் குழப்பம் இடையே அவையில் கேள்வி நேரம் நடந்தது. கறுப்பு பணம் மீட்பு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு, சி.பி.ஐ., நடவடிக்கைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை குறை கூறினர்.
கறுப்பு பணம் மீட்டில் முறையான வழிகள் காணப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என மத்திய இணை அமைச்சர் பிரதாப் ரூடி கூறினார்.
100 நாள் வாக்குறுதி என்னாச்சு? பார்லி., வளாகத்தில் பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் கறுப்பு பணத்தை திருப்பி கொண்டு வருவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லையே, என்றார்.
ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்களுக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக செலக்ஷன் கமிட்டி கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. என்றார். இது தொடர்பாக தீர்மானம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு குரல் ஒட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. டிச. 12 க்குள் இன்சூரன்ஸ் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஐதராபாத் விமான நிலையம் பெயர் மாற்றம் தொடர்பாக ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது . இதனையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
Comments