ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த நாங்க ரெடி... தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா

ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த நாங்க ரெடி... தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாOneIndia News : சென்னை: காலியாக உள்ள ஸ்ரீ ரங்கம் சட்டபேரவை தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதையடுத்து அவருடைய முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது. ஆனால் ஸ்ரீ ரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை எதிர்கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீ ரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றிடமாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் நேற்று இணையதளத்தில் அறிவித்தார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, ஸ்ரீ ரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இருந்து முறைப்படி தகவல் வந்துள்ளதாக கூறினார். மேலும் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் அதிகாரியின் அறிவிப்பினார் ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது. அனேகமாக டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Comments