உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் தூங்கிய சி.பி.ஐ., இயக்குநர்

தினமலர் செய்தி : கவுகாத்தி: கவுகாத்தியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தூங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய சிலரை சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சந்தித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2ஜி வழக்கு விசாரணையில் இருந்து அவரை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் சின்ஹாவின் பதவிக்காலம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், அசாம் தலைவர் கவுகாத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சின்ஹா தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.பி.,க்கள் கலந்து கொண்டனர். சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும் மாநாட்டில், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், அந்த அமைப்பில் சேர, இந்திய இளைஞர்களை தவறாக வழிநடத்துதல், காஷ்மீர் மாநிலம் அர்னியாவில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தூங்கிக்கொண்டிருந்தார். இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படம்பிடித்தனர். போலீஸ் டி.ஜி.பி.,க்கல் கலந்து கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சி.பி.ஐ., இயக்குநர் தூங்கிக்கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவின் பங்கு மிக முக்கியமானது. பணியின் போது உயிரிழந்த போலீசாரை தலைவணங்குகிறேன். டில்லியில் தேசிய போலீசார் நினைவிடம் அமைப்பதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.அவர்களை சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. உலகம் முழுவதும் பயங்கரவாதம் உள்ளது, ஆனால் அதனை நமது நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது.சர்வதேச பயங்கரவாதம் இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments