பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு அவசியம்:
உலகில் தற்போதுள்ள பயங்கரவாத பிரச்னையை சமாளிக்க ஒரு விரிவான ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டும்.அதற்கு இருதரப்பு பாதுகாப்பை ஆழப்படுத்த வேண்டும்.புதிய செழிப்பான புதியபாதைகளை கண்டுபிடிக்க நாம்,முந்தைய நூற்றாண்டின் சாலைகளில் பயணம் செய்ய இருதரப்பும் முயற்சி செய்ய வேண்டும்.நாம் நம்முடைய பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அடித்தளத்தால் மிகப் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம். அதை பாதுகாப்பது மிக முக்கிய பணியாக இருக்கும் என்றும் மோடி வலியுறுத்தினார்.நான் எங்களுடைய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னுரிமையில் முக்கிய பங்காளியாக ஆஸ்திரேலியாவை பார்க்கிறேன் என்றார் மோடி.
இந்தியாவில் 30 ஆண்டுகளுக்குபிறகு அமைந்த மத்திய அரசு பெரும்பாண்மை பலத்துடத்துடன் ஆட்சி செய்கிறது.அது ஒவ்வொரு தொலைதூர கிராமத்திலிருந்து கிடைத்த புதிய அசூர பலம். அந்த பலம் இளைஞர்களிடமிருந்து கிடைத்த பலமாகும்.இங்குள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் பெருமைபட வேண்டிய நேரமிது என்றார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி, தனது பார்லிமென்ட் உரையில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் பெருமிதம்:
ஆஸ்திரேலியா பார்லிமென்டில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சிறப்பு கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய பெருமை பெற்றவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் பெருமிதத்துடன் கூறினார்.
Comments