தினமலர் செய்தி : சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க., அரசை பற்றிய பிரச்னைகள் மூன்றரை ஆண்டுகளில் மலை போல் குவிந்து
கிடக்கின்றன. முதல்வர் எச்சரிக்கைக்கு அஞ்சாமல் தி.மு.க., தன் கடமையை
சட்டப்படி செய்யும். டிச.,4ம் தேதி துவங்கும் சட்டசபை
கூட்டத்தொடரில்,கலந்து கொள்வதில் எந்த தடையும் இல்லை. அதற்கு பயமும்
இல்லை. ஆனால் ஜெ.,வின் நிலை என்ன ? அரசின் பொறுப்புகளை கவனிக்கிறாரோ
இல்லையோ, தினசரி அறிக்கை விட தவறுவதில்லை. பன்னீர்செல்வத்துக்கு தமிழகத்தை
ஆளும் முதல்வர் என்பது மறந்துவிட்டார். கல்லூரி முதல்வர் போல் அறிக்கை
விடுகிறார். ஜெ., வழியில்அறிக்கை விட தவறுவதில்லை. ஆட்சியின் அவலங்கள்
பற்றி நாள் கணக்கில் பேச ஏராளமான பொருள்கள் தாராளமாகவே உள்ளன. வாயை
கொடுத்து வம்பை விலக்கு வாங்குவது ஏன். முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு
இருந்ததை போல் அமைதியாக இருப்பதே பன்னீருக்கு அலகு என கூறியுள்ளார்.
Comments